Community Wishlist Survey/Invitation (proposal phase)/ta

This page is a translated version of the page Community Wishlist Survey/Invitation (proposal phase) and the translation is 100% complete.

சமூக விருப்பப்பட்டியல் ஆய்வு 2021

 

2021 சமூக விருப்பப்பட்டியல் ஆய்வு இப்போது திறக்கப்பட்டுள்ளது!

இந்த ஆய்வு அடுத்த ஆண்டில் சமூக தொழில்நுட்ப குழு எதில் பணி புரிய வேண்டும் என்பதை சமூகங்கள் தீர்மானிக்கும் செயல்முறையாகும். 30 நவம்பர், வரை அனைவரையும் செயற்குறிப்புகளைச் சமர்ப்பிக்க நாங்கள் ஊக்குவிக்கிறோம், அல்லது பிற செயற்குறிப்புகளில் கருத்துத் தெரிவித்து அவற்றை மேம்படுத்த உதவவும்.

8 திசம்பர் மற்றும் 21 திசம்பர்க்கு இடையே சமூகங்கள் செயற்குறிப்புகளில் வாக்களிக்கும்.

சமூக தொழில்நுட்ப குழு அனுபவம் வாய்ந்த விக்கிமீடியா தொகுப்பாளர்களுக்கான கருவிகளில் கவனம் செலுத்துகிறது.

நீங்கள் எந்த மொழியிலும் செயற்குறிப்புகளை எழுதலாம், அவற்றை நாங்கள் உங்களுக்காக மொழிபெயர்ப்போம். உங்கள் செயற்குறிப்புகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம், நன்றி!