Fundraising 2011/Jimmy Letter 003/ta

Translation instructions
  • For pages marked "Missing" or "In progress", click the page title and start translating. When you are done, click "edit status" and change the status to proofreading.
  • For pages marked "Needs updating", compare the page to the source page and update the translation accordingly. When you are done, click "edit status" and change the status to proofreading.
  • It is important to have someone else proofread the translated page! If you have proofread a page and it is ready for publication, click "edit status" and change that page's status to ready.
  • If you are changing something that has already been published, change its status back to ready for it to be published again.

If you have any questions or feedback regarding the translation process, please post them here. Translation FAQ

கூகுள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வழங்கிகளை வைத்திருக்கலாம். யாஹூ சுமார் 13,000 பணியாளர்களை கொண்டுள்ளது. எங்களிடம் 679 வழங்கிகளும் 95 பணியாளர்களும் உள்ளனர்.

உலகளாவிய இணையதளங்களில், விக்கிபீடியா 5 ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 45 கோடி மக்களுக்கு, பல பில்லியன் இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.

வியாபாரம் நல்லது தான்; அதில் விளம்பரம் என்பதும் ஒரு குற்றமல்ல. ஆனால், அவற்றுக்கு விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.

SITENAME அதிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இது அனைவருக்கும் உரித்தான நூலகம், அழகிய பூங்கா போன்று திகழ்வது. அறிவுத்திருக்கோவில் போன்றது. நாம் சிந்திக்கவும், கற்கவும், நமது அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் செல்லக்கூடிய ஒரு இடம் இது.

நான் விக்கிமீடியா அறக்கட்டளையை நிறுவிய போது இதனை லாப நோக்கு நிறுவனமாக மாற்றி விளம்பரப் பதாகைகளை தளத்தில் போட்டு இருக்கலாம். ஆனால் நான் வித்தியாசமான ஒன்றைச் செய்ய விரும்பினேன். நாங்கள் பல வருடங்களாக இதை நேரடியாகவும் நெருக்கமாகவும் பேணி வருகிறோம். நாங்கள் எங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுகிறோம். விரயமாக்குதல் பிறரது தொழில் - எங்கள் வழக்கமல்ல.

இதைப் படிப்பவர்கள் அனைவரும் 250 இந்திய ரூபாய் கொடையளித்தாலே, நாங்கள் வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நன்கொடை வேண்டினால் போதுமானதாக இருக்கும். ஆனால், அனைவருக்கும் அது சாத்தியம் அல்ல. ஒவ்வொரு வருடமும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கே நன்கொடைகள் கிடைக்கின்றன.

வரும் ஓர் ஆண்டு விக்கிப்பீடியாவை பாதுகாக்கவும், தொடர்ந்து தாங்கவும் இந்திய ரூபாய் 250/-, 500/-, 1000/- அல்லது உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட பரிசீலியுங்கள்.

நன்றி,

ஜிம்மி வேல்ஸ்
விக்கிப்பீடியா நிறுவனர்