உக்ரைனின் கலாச்சார சாதுர்ய மாதம் 2024
Ukraine's Cultural Diplomacy Month 2024
[Social media: #UCDMonth] • [Link here: ucdm.wikimedia.org.ua]
விக்கிபீடியாவில் உக்ரேனிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சவாலுக்கு வரவேற்கிறோம்!
- என்ன: விக்கிபீடியாவின் பல மொழிப் பதிப்புகளில் உக்ரைனின் கலாச்சாரம் மற்றும் மக்கள் பற்றிய கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஓர் எழுத்துப்போட்டி இது. இதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டுரைகளின் முன்மொழியப்பட்ட பட்டியல் இந்த போட்டியின் அமைப்பாளர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மிகுதியாக பங்களிப்பவர்களுக்கு பரிசுகள் உண்டு.
- எப்போது: இந்த எழுத்துப் போட்டி 1 மார்ச் 2024 இலிருந்து 31 மார்ச் 2024 வரை நடைபெறும்.
- எப்படி: இந்தப் போட்டி அமைப்பு எளிமையானது; இதில் பின்வரும் நான்கு படிகள் உண்டு: வேலை செய்ய விரும்பும் கட்டுரைகளை தேர்ந்தெடு → உங்கள் பணிக்காக புள்ளிகளை பெறுங்கள் → புள்ளிகளைப் பெருக்குவதை நோக்கமாகக் கொள்ளுங்கள் → உங்கள் பங்களிப்புக்காக விருது பெறுங்கள்!
- யார்: எந்த விக்கியிலும் உருவாக்கப்பட்ட பயனர் கணக்கைக் கொண்ட எந்த விக்கிபீடிய பயனுறும் இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறலாம். பங்கேற்க நீங்கள் பங்கேற்பாளர்கள் பிரிவில் பதிவு செய்ய வேண்டும்.
- ஏன்: இந்தப் போட்டியின் மூலம், உக்ரேனிய மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளை மேம்படுத்தவும், விக்கிபீடியாவில் உயர்தரத் தகவலை உறுதி செய்யவும் நாங்கள் விழைகிறோம். விக்கிமீடியா உக்ரைன் உக்ரனின் அமைப்பு மற்றும் உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் இணைந்து இந்தப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.