விக்கிப்பீசியா 101 ஆரம்ப நிலையிலுள்ளோருக்கான கல்வி
பற்றி

விக்கிப்பீடியா 101 என்பது ஆரம்பநிலையில் உள்ளோருக்கான இணையவழி விக்கிபீடியா கல்வித் திட்டத் தொகுப்பாகும். இந்தத் திட்டம் துருக்கி விக்கிமீடியா சமூகப் பயனர் குழு மற்றும் தியோபந்த் சமூக விக்கிமீடியா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. விக்கிபீடியா 101-ன் காணொலி காட்சிகள் இஸ்தான்புல் பில்கி பல்கலைக்கழக ஆர். ஜி. பி. அரங்கில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. காணொலிகள் கட்டட்டற்ற பொது உரிமத்தின் கீழ் உரிமம் பெற்றவை. இவை விக்கிமீடியா துருக்கு பயனர் குழுவின் யூ டியூபிலும் விக்கிமீடியா பொதுவகத்திலும் வெளியிடப்படுகின்றன.
இந்த காணொலிகள் துருக்கியில் படமாக்கப்பட்டது. பின்னர் விக்கிமீடியா துருக்கியால் அதன் யூடியூப் அலைவரிசையில் வெளியிடப்பட்டது. இதன் விளைவைக் கருத்தில் கொண்டு, நோட்ரே டேம் ஆங்கில குழுமம் மற்றும் தியோபந்த் சமூக விக்கிமீடியாவால் ஆங்கிலம், பெங்காலி மற்றும் உருது மொழிகளில் மறுமொழியாக்கம்/மறுவாக்கம் செய்ததன் மூலம் அதே உரிமம் மற்றும் தரத்தின் கீழ் வெளியிடுகிறது.
பங்காண்மை மற்றும் பங்கேற்பாளர்கள்
-
Wikimedia Community User Group Turkey (project main implementer)
-
Notre Dame English Club (translation and content determination support)
-
Deoband Community Wikimedia (ideas and re-review)
-
Istanbul Bilgi University RGB Studios (technical support such as video shooting and editing)
பங்கேற்பாளர்கள்
- விக்கிமீடியா சமூகப் பயனர் குழு துருக்கி - Kurmanbek (கேனர்)
- நோட்ரே டேம் ஆங்கில குழுமம்- Mrb Rafi
- தியோபந்த் சமூக விக்கிமீடியா - TheAafi
- இசுதான்புல் பில்கி பல்கலைக்கழகம் - தகவல் தொடர்பு கல்வியாளர்கள் மற்றும் ஆர். ஜி. பீ. ஒளிப்பதிவு அரங்க மாணவர்கள்
நன்றி
உள்ளடக்கம்

விக்கிபீடியா 101 காணொலி கல்வித் தொகுப்பில் மொத்தம் 10 காணொலிகள் உள்ளன.
- விக்கிபீடியா என்றால் என்ன?
- விக்கிப்பீடியாவின் வரலாறு
- அன்றாட வாழ்வில் விக்கிப்பீடியா
- பதிவு & இடைமுகம்
- தொகுக்க நுழையவும்
- கலந்துரையாடல் பக்கங்கள் மற்றும் பயனர் கையொப்பம்
- மேற்கோள்கள்
- விக்கிப்பீடியாவும் பகுப்புகளும்
- பொதுவகத்தில் ஊடகங்களை பதிவேற்றம் செய்தல்
- மொழியாக்க கருவியின் உதவியுடன் மொழியாக்கம் செய்தல்
இலக்குகள்
- துருக்கியிலும், திட்டப் பங்கேற்பாளர்களின் நாடுகளிலும் உள்ளவர்கள் இணையத்திலிருந்து விக்கிப்பீடியாவைக் கற்றுக்கொள்ள ஊக்குவிப்பதற்காக.
- இணைப்போம் நிரல் மூலம் விக்கிமீடியா சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.
- விக்கிமீடியா இயக்க உத்தியின் ஒரு பகுதியான அறிவின் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக.