Community Wishlist Survey 2021/Invitation (voting phase)/ta
சமூக விருப்பப்பட்டியல் ஆய்வு 2021
பதிவுசெய்யப்பட்ட அனைத்து பயனர்களையும் 2021 சமூக விருப்பப்பட்டியலில் வாக்களிக்க அழைக்கிறோம். நீங்கள் விரும்பும் பல விருப்பங்களுக்கு இப்போது முதல் 21 திசம்பர் வரை வாக்களிக்கலாம்.
ஆய்வில், அனுபவமிக்க தொகுப்பாளர்களுக்கான புதிய மற்றும் மேம்பட்ட கருவிகளுக்கான விருப்பங்கள் சேகரிக்கப்படுகின்றன. வாக்களிப்புக்கு பின்னர், உங்கள் விருப்பங்களை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். நாங்கள் மிகவும் பிரபலமானவற்றிலிருந்து தொடங்குவோம்.
சமூக தொழில்நுட்ப குழு ஆகிய நாங்கள், விக்கிமீடியா அறக்கட்டளையின் குழுக்களில் ஒன்றாகும். நாங்கள் தொகுப்பு மற்றும் விக்கி மிதவாத கருவிகளை உருவாக்குகிறோம் மற்றும் மேம்படுத்துகிறோம். சமூக விருப்பப்பட்டியல் ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் என்ன வேலை செய்கிறோம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை, நீங்கள் விருப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நீங்கள் மிகவும் ஆர்வமாக இருப்பவற்றிற்கு வாக்களிக்கலாம். அடுத்து, நாங்கள் ஆய்விலிருந்து விருப்பங்களைத் தேர்வு செய்கிறோம். சில விருப்பங்களை தன்னார்வ உருவாக்குநர்கள் அல்லது பிற குழுக்கள் வழங்கலாம்.
உங்கள் வாக்குகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நன்றி!