2012-ம் ஆண்டிற்கான நிதிதிரட்டல் / மொழிபெயர்ப்பு / ஜிம்மி வேல்ஸுடைய வேண்டுகோள்
- NOTE TO TRANSLATORS
This letter is a new translation request, but re-uses large parts of the 2011 Jimmy Appeal, with slight modifications in the second version.
If the 2011 Jimmy Letter has been translated into your language, you can probably re-use much of it for this translation. :-) Jseddon (WMF) (talk) 18:37, 27 September 2012 (UTC)
Pages for translation: [edit status] | |
Jimmy Appeal (source) |
Ready |
Landing Page and Banner messages (source) |
Please proofread |
Donor information pages (source) All languages | Continue to translate |
Version 1 (Millions)
கூகுள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வழங்கிகளை வைத்திருக்கலாம். யாகூ ஏறக்குறைய 12,000 பணியாளர்களை வைத்திருக்கின்றது. நம்மிடம் 800 வழங்கிகளும் 150 பணியாளர்களும் உள்ளனர்.
உலகளாவிய இணையதளங்களில், விக்கிப்பீடியா 5-ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 45 கோடி மக்களுக்கு, பல பில்லியன் இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.
வியாபாரம் நல்லது தான்; அதில் விளம்பரம் என்பதும் ஒரு குற்றமல்ல. ஆனால், அவற்றுக்கு விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.
விக்கிப்பீடியா அதிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இது அனைவருக்கும் உரித்தான நூலகம், அழகிய பூங்கா போன்று திகழ்வது. அறிவுத்திருக்கோவில் போன்றது. நாம் சிந்திக்கவும், கற்கவும், நமது அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் செல்லக்கூடிய ஒரு இடம் இது.
நான் விக்கிப்பீடியாவை நிறுவிய போது இதனை இலாப நோக்கு நிறுவனமாக மாற்றி விளம்பரப் பதாகைகளை தளத்தில் போட்டு இருக்கலாம். ஆனால் நான் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட ஒன்றைச் செய்ய விரும்பினேன். நாம் பல வருடங்களாக விக்கிப்பீடியாவை நேரடியாகவும் நெருக்கமாகவும் பேணி வருகிறோம். நாம் கடுமையாக காலங்கள் பல உழைத்து செலவினை சுருக்கமாகவும் சிக்கனமாகவும் கொண்டுள்ளோம். நமது குறிக்கோள்களை நிறைவேற்ற கடினமாக உழைத்து வருகிறோம்.
இதைப் படிப்பவர்கள் அனைவரும் 250/- நன்கொடையளித்தாலே, நாங்கள் வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நன்கொடை வேண்டினால் போதுமானதாக இருக்கும். ஆனால், அனைவராலும் இது செய்யவோ அல்லது பங்களிக்கவோ இயலாது. இதனால் ஒவ்வொரு வருடமும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கே நன்கொடைகள் கிடைக்கின்றன.
வரும் ஓர் ஆண்டு விக்கிப்பீடியாவை பாதுகாக்கவும், தொடர்ந்து தாங்கவும் 250/-, 500/-, 1000/- அல்லது உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட பரிசீலியுங்கள்.
நன்றி,
ஜிம்மி வேல்ஸ்
விக்கிப்பீடியா நிறுவனர்
Version 2 (Thousands)
கூகிள் நிறுவனமும் யாகூ நிறுவனமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழங்கிகளையும், ஊழியர்களையும் கொண்டுள்ளது. நமது நிறுவனம் வெறும் 800 வழங்கிகளையும் 150 ஊழியர்களையும் மட்டுமே கொண்டுள்ளது.
உலகளாவிய இணையதளங்களில், விக்கிப்பீடியா 5-ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 45 கோடி மக்களுக்கு, பல பில்லியன் இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.
வியாபாரம் நல்லது தான்; அதில் விளம்பரம் என்பதும் ஒரு குற்றமல்ல. ஆனால், அவற்றுக்கு விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.
விக்கிப்பீடியா அதிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இது அனைவருக்கும் உரித்தான நூலகம், அழகிய பூங்கா போன்று திகழ்வது. அறிவுத்திருக்கோவில் போன்றது. நாம் சிந்திக்கவும், கற்கவும், நமது அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் செல்லக்கூடிய ஒரு இடம் இது.
நான் விக்கிப்பீடியாவை நிறுவிய போது இதனை இலாப நோக்கு நிறுவனமாக மாற்றி விளம்பரப் பதாகைகளை தளத்தில் போட்டு இருக்கலாம். ஆனால் நான் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட ஒன்றைச் செய்ய விரும்பினேன். நாம் பல வருடங்களாக விக்கிப்பீடியாவை நேரடியாகவும் நெருக்கமாகவும் பேணி வருகிறோம். நாம் மற்றவர்களைப் போன்று விரயமாக்குவதை வழக்கமாக கொள்ளவில்லை, நமது குறிக்கோள்களை நிறைவேற்ற கடினமாக உழைத்து வருகிறோம்.
இதைப் படிப்பவர்கள் அனைவரும் நன்கொடையளித்தாலே, நாங்கள் வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நன்கொடை வேண்டினால் போதுமானதாக இருக்கும். ஆனால், அனைவருக்கும் இது சாத்தியமோ அல்லது அனைவராலும் பங்களிக்கவோ முடியாது. ஒவ்வொரு வருடமும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கே நன்கொடைகள் கிடைக்கின்றன.