விக்கிமீடியா நிறுவனத் தேர்தல்/பணிப்பாளர் குழு தேர்தல்/2013
The election ended 22 June 2013. No more votes will be accepted. The results were announced on 24 June 2013. |
வாக்களிப்பது எப்படி? நீங்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் எனில்:
| |
வாக்களிக்க இன்ன்மும் சிக்கலா? இங்கே சொடுக்கவும். |
பொறுப்பாளிகள் குழு 2013க்கான தேர்தல் சூன் 8 முதல் சூன் 22 2013 வரை நடைபெறும். விக்கிமீடியா அமைப்பின் உறுப்பினர்களுக்கு 3 வேட்பளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது அந்த 3 வேட்பாளர்கள் 2 வருடம் பதவியில் நீடிக்கலாம். அதாவது 2015 வரை பதவியில் நீடிக்கலாம். பொறுப்பாளிகள் குழு என்பது இறுதி அதிகாரம் படைத்த குழு ஆகும். இது ஒரு லாப நோக்கற்ற அமைப்பு ஆகும்.[[[w:501(c)(3)|501(c)(3)]]ஐக்கிய அமெரிக்கவில் United States பதிவு பெற்ற அமைப்பு ஆகும். விக்கிமீடியா அறக்கட்டளை மேலும் சில திட்டங்களை many diverse projects நிர்வகித்து வருகிறது உதாரணமாக விக்கிபீடியாWikipedia , காமன்ஸ்Commons. மற்றும் சில.
தேர்வுக்குழு சூன் 22 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ nd முடிவுகளை அறிவிக்கவுள்ளது. விரிவான முடிவுகள் கிடைக்கப்பெறும்.
வேட்பாளர்களுக்குத் தகவல்
புதிய குழு தேர்வு விக்கிமீடியா அறக்கட்டளையின் விதிகளுக்குட்பட்டு இருக்க வேண்டும். duty of care. குழுவின் நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாகவும் ஒழுங்காகவும், கஷ்டப்பட்டு உழைக்கின்ற வகையிலும்,பிறருக்கு தகவல் அளிக்கும் வகையிலும்,சாதாரண மனிதரும் பயன் படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்த அக்கறை எடுத்துக்கொள்ளும் கடமை உ.ம்.,குழுவின் மதிப்பிற்கு பங்கம் விளைவிக்காத தகுதியான நபரை குழுவிற்கு சேவை செய்ய தேர்ந்தெடுப்பது.
யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட உள்ளார்களோ அவர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் முன்பு விக்கிமீடியா அறக்கட்டளை குழு கைன்னூலைboard manual படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஆணையத்தின் உறுப்பினராக பணிகளும், கடமைகளும்
குழுவின் கைன்நூலில் இருந்து:
பொறுப்பளிகளுக்கான குழு தான் விக்கிமீடியா அறக்கட்டளையை நிர்வகிக்கும் அதிகாரம் படைத்த குழு ஆகும்.
அந்த குழுவின் பொறுப்புகள் ஆவன:
- விக்கிமீடியா அறக்கட்டளை மற்றும் அதன் திட்டங்களுக்கான குறிக்கோள்கள் ,இலக்குகள் ,நெடுநாள் திட்டங்களையும் மற்றும் உயர் மட்ட கொள்கைகளையும் வரையறுத்தல்.
- விக்கிமீடியா அறக்கட்டளையின் செயல் இயக்குனரை தேர்ந்தெடுத்தல்.செயல் இயக்குனர் தான் அறக்கட்டளையின் அன்றாட நடவடிக்கைகளை மேர்பார்வையிடுவதுஇ அதன் செயல்களை மதிப்பீடு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வார்.
- சுததிரமான வருவாய் ஆதாரங்களை விவரிப்பதன் மூலம் சங்கத்தினுடைய நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல்.
- அறக்கட்டளையின் நடவடிக்கைகளை சமூகத்திற்கு அதாவது விக்கிமீடியா பயனாளிகளுக்கு தெரிவிப்பது.
- கணக்குத்தணிக்கை,வரவு செலவுத்திட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஊழியர்களுக்கு அளித்து மேற்பார்வை செய்ய வைத்தல்.
- சட்டம் மற்றும் நீதிநெறியை பராமரித்தல்.
- புதிய பொறுப்பாளிகளை சேர்த்தல் மற்றும் ஏற்கனவே உள்ளவர்களை நிலைக்கு தகுந்தவாறு மாற்றுதல்.
- அறக்கட்டளையின் குறிக்கோள்களை பொது மக்களிடம் பரப்புதல்.
குழுவின் கடமைகள் அல்லாதவை:
- அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது, அவசர காலங்களில் தவிர.
- விக்கிமீடியாவின் திட்ட-அளவிலான கொள்கைகளை உருவாகுவது.
- அடிப்படை சமூக பிரச்சனைகளை தீர்ப்பது.
- அறக்கட்டளையின் வழக்கமான வேலைகளில் குரிப்பிட்டவற்றில் தானாக முன்வந்து செயல் படுதல்.
வேட்புமனுக்கான முன் நிபந்தனைகள்
தகுதி உடையவர்களாக ஆவதற்கு வேட்பாளர்கள் குழு மற்றும் செயற்குழுவிற்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட பிரச்சன்னைகளில் தேவையான நேரத்தையும் ஆற்றலையும் அளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும், நம்பிக்கை சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை தெரிவிக்கவும் தயாராக இருக்க வேண்டும் மற்றும் குழுவின் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்களுக்கான தகுதியானது voters விக்கிமீடியா அறக்கட்டளைக்கானது (பார்க்கvoter requirements) போலவே ஆகும்.
கூடுதலான தகுதிகள்:
- நீங்கள் எந்த விதமான குற்றமோ அல்லது ஒழுங்கீனமான அல்லது ஏமாற்ற கூடிய செயல்களையோ செய்திருக்க கூடாது.
- நீங்கள் எந்தவொரு நிறுவனமோ அல்லது லாப-நோக்கற்ற ஒரு அமைப்பிலிருந்து ஒழுங்கீன செயலுக்காகவோ அல்லது தவறான செயலுக்க்காகவோ நீக்கப்பட்டு இருக்க கூடாது.
- வேட்பு மனு தாக்கல் செய்யும் போதோ அல்லது தேர்தலின் போதோ நீங்கள் விக்கிமீடியா அறக்கட்டளையில் இருந்து நீங்கள் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீக்கப்பட்டு இருக்க கூடாது.
- நீங்கள் உங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் பொது அதாவது நீங்கள் போட்டியிடும் பட்சத்தில் உங்களது தனிப்பட்ட அடையாளத்தை பொதுவில் வெளியிட வேண்டும்(ஏனெனில் குழுவின் உறுப்பினர்கள் ஒரு பொது பதிவு ஆகும், எனவே பெயர் இல்லாமலோ அல்லது ஒரு புனைப்பெயரை கொண்டோ பொறுப்பாளிகள் குழுவில் ஒரு பதவியை வகிக்க முடியாது. )
- நீங்கள் குறைந்தபட்சம் 18 வயதுடைவராக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் நாட்டினுடைய சட்டப்பூர்வமான வயதை அடைந்திருக்க வேண்டும்.
- தங்கள் அடையாளச்சான்றை விக்கிமீடியா அறக்கட்டளைக்கு சமர்ப்பிக்கவும்.(கீழே பார்க்க)
விதிவிலக்கு: தற்பொழுதைய பொறுப்பாளிகள் குழு உறுப்பினர்கள் மேற்கூறிய தகுதிகள் இல்லாமலும் தேர்தலில் போட்டியிடலாம்.
உங்கள் வேட்புமனுவை சமர்ப்பிப்பது எப்படி
தாங்கள் தகுதி உடையவராக இருந்தால் தங்கள் வேட்பு மனுவை கீழ் வருமாறு தாக்கல் செய்யவும்
- தாங்கள் பொறுப்பாளிகள் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் தாங்கள் என்ன செய்வீர்கள் என்பது பற்றியும், தங்கள் விருப்பங்களையும் அனுபவங்களையும் மேலும் தாங்கள் எதுவெல்லாம் சம்பந்தமுடையது என்று எண்ணுகிறீர்களோ அதை பற்றி 1200 எழுத்துக்களுக்கு(இடைவெளிகளை தவிர) மிகாமல் எழுதவும். தங்கள் வேட்பு மனு சுருக்கத்தை ஏற்பிசைவு பட்டியலில் சேர்க்கவோ அல்லது பிற பக்கங்களிலோ பயன்படுத்த கூடாது மேலும் பிற வேட்ப்பாளர்களுடன் slate செய்யக்கூடாது.
- Submit your summary தங்கள் வேட்பு மனுவையும் அதற்கான சுருக்கத்தை இதற்குள் 00:00, April 24, 2013 (UTC) and 23:59, May 17, 2013 (UTC)சமர்பிக்கவும். தங்கள் கூற்று சமர்ப்பித்த 3 நாட்களுக்கு பின்னரோ அல்லது May 17, எது முதலில் வருகிறதோ அது, வரை மட்டுமே மாற்றம் செய்யப்படும், சிறிய திருத்தங்கள் தவிர (உதாரணத்திற்கு, சொற்பிழை போன்றவை அல்லது மொழிபெயர்ப்பு). உள்ளடக்கத்தின் கருத்தில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது செர்த்தல்கள் கெடு நாளைக்கு பின் சமர்பிக்கப்பட்டால் அவை நேரமுத்திரை இடப்பட்டு உண்மையான உள்ளடக்கத்தில் இருந்து தனியாக வைக்கப்படும்,மற்றும் அந்த விசயங்கள் வேட்பாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் அதுவும் அவர்களது விவரங்கள் அனைத்து மொழிகளிலும் சரியாக மொழிபெயர்க்கப்பட்டால் மட்டும் வழங்கப்படும் மேலும் அந்த சமர்ப்பித்தல்கள் கெடு நாளன்றோ அல்லது அதற்கு முன்போ முழுவதும் மொழி பெயர்க்கப்படாமல் இருக்கலாம்.
- தங்கள் அடையாள சான்றை விக்கிமீடியா அறக்கட்டளைக்கு 23:59,மே 17 (UTC) முன்பு சமர்ப்பிக்கவும்.தாங்கள் தங்கள் பெயரை வேட்பாளர் பட்டியலில் பதிவு செய்தவுடன் மேற்படி விவரங்களுக்கு தாங்கள் தனிப்பட்ட முறையில் தேர்வுக்குழு உறுப்பினரால் தொடர்பு கொள்ளப்படுவீர்கள்
"மேற்குறிப்பட்ட தகுதிகளையும் நேர விளிம்பையும் நிறைவேற்றாத வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்"
விக்கிமீடியா அறக்கட்டளைக்கு தங்கள் அடையாளச்சான்றை அளித்தல்
பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் அடையாள சான்று மற்றும் தகுதி வயதை எட்டியதர்கான சான்று போன்றவற்றை போட்டியிடுவதற்கான தகுதியாக சமர்பிக்க வேண்டும். அந்த சான்றுகள் கீழ் வருபவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.
- ஓட்டுனர் உரிமத்தின் பிம்பப்படுத்தப்பட்ட நகல் அல்லது நகல்.
- கடுவுச்சீட்டின் பிம்பப்படுதப்ப்பட நகல் அல்லது நகல்.
- தங்கள் பெயர் மற்றும் வயதை குறிக்க கூடிய அதிகாரப்பூர்வமான ஆவணத்தின் பிம்பப்படுத்தப்பட்ட நகல் அல்லது நகல்.
அவற்றை விக்கிமீடியா அறக்கட்டளைக்கு கீழ் காண்பனவற்றுள் ஒன்றின் மூலமாக அனுப்பலாம்.
- மின்னஞ்சல் : secure-info wikimedia.org
- தொலைநகல்: +1 (415) 882-0495
- அஞ்சல் :
- Wikimedia Foundation Inc.
- ATTN: PHILIPPE BEAUDETTE
- 149 New Montgomery Street, 3rd Floor
- San Francisco, CA 94106
- USA
- அஞ்சல் மூலம் அனுப்புவது பரிந்துரைக்கப்படாத ஒன்று.
கெடு நாளான 23:59 UTC, 17 May 2013குள் வராத வேட்பாளரின் ஆவணங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது.
அமைப்பு
காலக்கோடு
- 24 ஏப்ரல் – 17 மே 2013: வேட்பாளர் சமர்ப்பிப்பு
- 17 மே 2013: அடையாள சான்று அனுப்ப கடைசி நாள் (தாமதமான அல்லது காணாமல்போன சமர்ப்பிப்புகள் தகுதிநீக்கம் செய்யப்படும்)
- 01–15 ஜூன் 2013: தேர்தல்கள்
- 16–18 ஜூன் 2013: வாக்கு-சோதனை
- 18–22 ஜூன் 2013: முடிவுகள் வெளியிடுதல்