Universal Code of Conduct/Revised enforcement guidelines/Announcement/Voting 1/ta
உலகளாவிய நடத்தை விதிகளுக்கான திருத்தப்பட்ட அமலாக்க வழிகாட்டுதல்கள் மீது வரவிருக்கும் வாக்கெடுப்பு
எல்லோருக்கும் வணக்கம்,
ஜனவரி நடுப்பகுதியில், உலகளாவிய நடத்தை விதிகளுக்கான அமலாக்க வழிகாட்டுதல்கள் இரண்டாவது சமூக அளவிலான ஒப்புதல் வாக்கெடுப்புக்கு உட்படும். இது மார்ச் 2022 வாக்கெடுப்புக்குப்பிறகு நிகழ்கிறது, அந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்காளர்கள் அமலாக்க வழிகாட்டுதல்களை ஆதரித்தனர். வாக்கெடுப்பின் போது, முக்கிய சமூக அக்கறைகளை முன்னிலைப்படுத்த பங்கேற்பாளர்கள் உதவினர். வாரியத்தின் சமூக விவகாரக் குழு, கவலைக்குரிய இந்தப் பகுதிகளை மீளாய்வு செய்யுமாறு கோரியது.
தன்னார்வலர் தலைமையிலான திருத்தக் குழு சமூக உள்ளீட்டை மீளாய்வு செய்வதிலும் மாற்றங்களைச் செய்வதிலும் கடுமையாக உழைத்தது. பயிற்சி மற்றும் உறுதிப்படுத்தல் தேவைகள், செயல்பாட்டில் தனியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆவணத்தின் வாசிப்புத்திறன் மற்றும் மொழியாக்கம் போன்ற கவலைக்குரிய பகுதிகளை அவர்கள் புதுப்பித்தனர்.
திருத்தப்பட்ட அமலாக்க வழிகாட்டுதல்களை இங்கே பார்க்கலாம்,மற்றும் மாற்றங்களின் ஒப்பீட்டை இங்கே காணலாம்.
எப்படி வாக்களிப்பது?
ஜனவரி 17ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறும். மெட்டா விக்கி -இல் உள்ள இந்தப் பக்கம் SecurePoll -ஐப் பயன்படுத்தி எப்படி வாக்களிப்பது என்பது பற்றிய தகவலை கோடிட்டுக் காட்டுகிறது.
யார் வாக்களிக்க முடியும்?
இந்த வாக்களிப்புக்கான தகுதித் தேவைகள் Wikimedia அறங்காவலர் வாரியத் தேர்தல்களைப் போலவே இருக்கும். வாக்காளர் தகுதி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு வாக்காளர் தகவல் பக்கத்தைபார்க்கவும். நீங்கள் தகுதியுள்ள வாக்காளராக இருந்தால், உங்கள் Wikimedia கணக்கைப் பயன்படுத்தி வாக்களிக்கும் பெருங்கணினியை அணுகலாம்.
வாக்களித்த பிறகு என்ன நடக்கும்?
தன்னார்வலர்களின் ஒரு சுயாதீன குழுவால் வாக்குகள் ஆராயப்படும், மேலும் முடிவுகள் Wikimedia-l, இயக்க வியூக மன்றம், டிஃப் (Diff) மற்றும் மெட்டா-விக்கி (Meta-wiki) யில் வெளியிடப்படும். வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க முடியும் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து தங்களுக்கு உள்ள கவலைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். அறங்காவலர் குழு, அமலாக்க வழிகாட்டுதல்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பார்க்கும்போதே, எழுப்பப்படும் ஆதரவு மற்றும் கவலைகளின் அளவுகளையும் பரிசீலிக்கும்.
On behalf of the UCoC Project Team,